Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ்நாட்டிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த 2,000 தமிழ் நூல்கள்; பொது நூலகத்திற்கு வழங்கி வைப்பு!

தமிழ்நாட்டிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த 2,000 தமிழ் நூல்கள்; பொது நூலகத்திற்கு வழங்கி வைப்பு!

52 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மக்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழ்நாடு ரோட்டரிக் கழகத்தின் ஊடாக மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு 2,000 தமிழ் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு ரோட்டரிக் கழகத்தின் ‘தன்வந்திரி – வாசி சுவாசி’ திட்டத்தின் கீழ் இந்த நூல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத்தின் ஸ்தாபகத் தலைவருமான வைத்தியர் இளையதம்பி சிறிநாத் மற்றும் ரோட்டரிக் கழக நிர்வாகிகளின் கோரிக்கைக்கு அமைவாக இந்நூல் அன்பளிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத், தமிழ்நாடு ரோட்டரிக் கழக நிர்வாகிகளிடமிருந்து முதற்கட்டமாகப் பெறுமதிமிக்க 2,000 தமிழ் நூல்களைப் பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் நூல்களைக் கையளிக்கும் நிகழ்வு கடந்த 05.11.2026 அன்று பிற்பகல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத் தலைவரும் மாநகரசபை உறுப்பினருமான வைத்தியர் கே.ஈ. கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூல்கள் உத்தியோகபூர்வமாக நூலக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டன.

இந்த நூல் தொகுப்பில் நாவல்கள், கவிதைகள், வரலாற்று நூல்கள், சங்க இலக்கியங்கள் மற்றும் ஆய்வு நூல்கள் எனப் பல்வேறு துறைசார்ந்த நூல்கள் உள்ளடங்கியுள்ளன.

இதன்போது தமிழ்நாடு ரோட்டரிக் கழகத்தின் பிரதிநிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

அத்துடன், எதிர்காலத்தில் தமிழ்நாடு ரோட்டரிக் கழகத்தின் ஊடாக மேலும் பல நூல் அன்பளிப்புகள் மற்றும் சமூக நலத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

இதன் தொடர்ச்சியாக, மட்டக்களப்பு பொது நூலகத்திற்கான தொழில்நுட்ப வளாகம் ஒன்றை அமைப்பதற்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான செயற்திட்ட அறிக்கையும் கையளிக்கப்பட்டது.

மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் அறிவாற்றல், சிந்தனைத் திறன் மற்றும் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதுடன், வாசிப்புப் பழக்கத்தை அடுத்த தலைமுறையினரிடையே ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வை. தினேஸ்குமார், மாநகரசபை உறுப்பினர்கள், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தர்மலிங்கம் பிரபாகரன், மாநகரசபை ஆணையாளர் என். தனஞ்செயன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், தமிழ்நாடு ரோட்டரிக் கழகத்தின் சென்னை மாவட்ட முன்னாள் ஆளுநர் என்.எஸ். சரவணன், தன்வந்திரி செயற்றிட்டப் பிரதானி டி.ஆர். தனசேகர், சிறப்பு முன்னெடுப்புக்களுக்கான பிரதானி எஸ். சாய்சேக்ஷன், தெற்காசிய ரோட்டரி வலயம் 5 உறுப்பினர் ஒருங்கிணைப்பாளர் ஜெகவண்ணன் மற்றும் நூலகப் பொறுப்பாளர்கள், அலுவலகர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மயிலத்தமடு விவகாரத்தில் சஜித் பிரேமதாச மௌனம் ஏன்?; மட்டக்களப்பில் அதிக வாக்குகளைப் பெற்றும் கவனம் செலுத்தவில்லை; அரியநேத்திரன் கேள்வி!
செய்திகள்

மயிலத்தமடு விவகாரத்தில் சஜித் பிரேமதாச மௌனம் ஏன்?; மட்டக்களப்பில் அதிக வாக்குகளைப் பெற்றும் கவனம் செலுத்தவில்லை; அரியநேத்திரன் கேள்வி!

November 6, 2026
இரண்டு ஆண்டுகளாகியும் தீராத பிரச்சினை; பிரௌண்ட் வீதி ரயில் கடவைக்கு சமிக்ஞை விளக்குகள் அமைக்க அர்ச்சுனா கோரிக்கை
செய்திகள்

இரண்டு ஆண்டுகளாகியும் தீராத பிரச்சினை; பிரௌண்ட் வீதி ரயில் கடவைக்கு சமிக்ஞை விளக்குகள் அமைக்க அர்ச்சுனா கோரிக்கை

November 6, 2026
மட்டு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
காணொளிகள்

மட்டு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

November 6, 2026
நெல் விவசாயிகளுக்கு புதிய வசதி; 500 மில்லியன் ரூபாய் செலவில் 50 நவீன நெல் உலர்த்தும் இயந்திரங்கள் வழங்கத் திட்டம்!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கு புதிய வசதி; 500 மில்லியன் ரூபாய் செலவில் 50 நவீன நெல் உலர்த்தும் இயந்திரங்கள் வழங்கத் திட்டம்!

November 6, 2026
கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,056 துப்பாக்கிகள், ஆயுதங்கள் மீட்பு
செய்திகள்

கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,056 துப்பாக்கிகள், ஆயுதங்கள் மீட்பு

November 6, 2026
உத்தியோகபூர்வ அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை இழந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!
அரசியல்

உத்தியோகபூர்வ அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை இழந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!

November 6, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.