Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கினால் மக்கள் போராட்டம் வெடிக்கும் – தமிழரசுக் கட்சி எச்சரிக்கை

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கினால் மக்கள் போராட்டம் வெடிக்கும் – தமிழரசுக் கட்சி எச்சரிக்கை

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு புல்லுமலை பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டால், அதற்கு எதிராக பெருமளவிலான மக்கள் போராட்டம் வெடிக்கும் என தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று உப தவிசாளர் உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.

ஏறாவூர் பற்று பிரதேச சபை உப தவிசாளர் சர்வானந்தன் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர், பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவிக்கையில், “குடிநீர் என்பது விற்பனை செய்யும் பொருள் அல்ல. அது இறைவனால் உயிரினங்களின் தாகத்தை போக்குவதற்காக படைக்கப்பட்ட இயற்கை வளம். அதை உறிஞ்சி விற்கும் முயற்சியை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தினர்.

2018 ஆம் ஆண்டில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் ஊடாக ‘மாகா தண்ணீர் தொழிற்சாலை’ என்ற பெயரில் இதே இடத்தில் தொழிற்சாலை அமைக்கும் முயற்சியை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் அந்த அனுமதியை ரத்து செய்தது. அதேபோல, ஏறாவூர் பற்று பிரதேச சபையிலும் அனுமதி வழங்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் வேறு ஒரு வர்த்தகரின் பெயரில் புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அண்மைய ஏறாவூர் பற்று அபிவிருத்தி குழுக் கூட்டத்தில், குறித்த தொழிற்சாலைக்கான அனுமதி கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, தண்ணீர் குறித்த ஆய்வு அறிக்கை கிடைத்தவுடன் அனுமதி வழங்கலாம் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பிரவு குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் தற்போது சுமார் 150 தண்ணீர் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தண்ணீர் வளம் மிகுந்த கம்பஹா போன்ற மாவட்டங்களில் அமைந்துள்ளன. ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்தகைய தொழிற்சாலை ஒன்று செயல்படுத்தப்பட்டால், நிலத்தடி நீர் வற்றுவதோடு விவசாயம், கால்நடை மற்றும் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அந்த பகுதி பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

“அனுமதி வழங்கப்பட்டால், தமிழரசுக் கட்சி முன்னின்று மட்டக்களப்பு மாவட்ட மக்களுடன் இணைந்து பாரிய மக்கள் போராட்டம் நடத்தும்” என அவர்கள் எச்சரித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
Next Post
ஆயித்தியமலை சதாசகாய அன்னை ஆலயத்தை நோக்கிய திருப்பாத யாத்திரை; 12,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

ஆயித்தியமலை சதாசகாய அன்னை ஆலயத்தை நோக்கிய திருப்பாத யாத்திரை; 12,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு