Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி; பிரான்ஸ் பிரதமர் பெய்ரு இராஜினாமா

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி; பிரான்ஸ் பிரதமர் பெய்ரு இராஜினாமா

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

பிரான்ஸ் பாராளுமன்றில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிராங்காய்ஸ் பெய்ருவுக்கு எதிராக பெரும்பான்மை எம்.பி.க்கள் வாக்களித்ததால், பிரதமர் பதவியை பெய்ரு இராஜினாமா செய்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதியாக உள்ள இமானுவேல் மெக்ரோன், கடந்த வருடம் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி, தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்றத்தில், முதலில் கேப்ரியல் அட்டல் பிரதமராக பதவி வகித்தார். அவர் கடந்த செப்டெம்பரில் இராஜினாமா செய்த நிலையில், அதன் பிறகு மைக்கேல் பார்னியர் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

மைக்கேல் பார்னியர் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவதாக பிராங்காய்ஸ் பெய்ரு பிரதமராக பதவியேற்றார்.

பிரான்ஸ் அரசுக்கு சுமார் 3 ட்ரில்லியன் யூரோக்கள் அளவுக்கு கடன் உள்ளது. அரசை கடனில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க பிரதமர் பிராங்காய்ஸ் பெய்ரு திட்டமிட்டு வந்தார்.

அரசின் செலவுகளை சிக்கனமாக மேற்கொள்வது அவசியம் என்ற தன் நிலைப்பாட்டுக்கு ஆதரவு கோரி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிராங்காய்ஸ் பெய்ரு அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடந்தது.

மொத்தமுள்ள 573 உறுப்பினர்களில் 364 உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இதுவரை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் ஆட்சியில் 4 முறை பிரதமர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.

இப்போது புதிய பிரதமரை கண்டறிந்து பதவியேற்கச் செய்ய வேண்டிய நெருக்கடி ஜனாதிபதி மெக்ரோனுக்கு ஏற்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
உலக செய்திகள்

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

September 10, 2026
வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!
செய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

September 10, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

September 10, 2026
காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

September 10, 2026
கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு

September 10, 2026
களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!
செய்திகள்

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!

September 10, 2026
Next Post
வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு