இலங்கையில் இன்று (27) முதல் முட்டைகளின் மொத்த விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மக்காச் சோளத் தட்டுப்பாடு, விலங்குத் தீவனங்களின் விலை அதிகரிப்பு மற்றும் நிலவும் அதிக வெப்பநிலை ஆகிய காரணங்களால் முட்டை உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், விலையை உயர்த்தாமல் முட்டை உற்பத்தித் தொழிலை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய விலைத் திருத்தத்தின் அடிப்படையில், வெள்ளை முட்டையின் மொத்த விற்பனை விலை ரூ. 43 ஆகவும், சிவப்பு முட்டையின் மொத்த விற்பனை விலை ரூ. 44 ஆகவும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதற்கிடையில், நாட்டின் சில பகுதிகளில் ஒரு முட்டையின் சில்லறை விலை ஏற்கனவே ரூ. 50 வரை உயர்ந்துள்ளதாகவும் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.








