Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தெஹிவளை மயான துப்பாக்கிச் சூடு; துப்பாக்கிதாரி கைது!

தெஹிவளை மயான துப்பாக்கிச் சூடு; துப்பாக்கிதாரி கைது!

2 months ago
in செய்திகள்

தெஹிவளை – கல்கிசை நிசல செவன பொது மயானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி மயானத்தில் இருந்த 56 வயதுடைய நபர் ஒருவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

9 மில்லிமீட்டர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் குறித்த நபரின் இடது கை மற்றும் மார்பு பகுதியில் காயங்கள் ஏற்பட்டதுடன், அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை நேற்று (26) தெல்கந்த பகுதியில் வைத்து கைது செய்திருந்தனர். அவரிடமிருந்து 7 கிராம் 200 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

25 வயதுடைய குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் குற்றச்செயலை மேற்கொள்வதற்காக ரூ. 200,000 வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் ரூ. 55,000 பணம் மற்றும் சந்தேகநபர் பயன்படுத்திய மூன்று கைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: Battinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; 90 வயதில் மறைவு!
செய்திகள்

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; 90 வயதில் மறைவு!

September 11, 2026
FCID-யிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ!
செய்திகள்

FCID-யிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ!

September 11, 2026
சிம் அட்டைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; 2027 முதல் 100% பயனாளர் அடையாளத்தை உறுதிப்படுத்தல்!
செய்திகள்

சிம் அட்டைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; 2027 முதல் 100% பயனாளர் அடையாளத்தை உறுதிப்படுத்தல்!

September 11, 2026
மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
செய்திகள்

மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

September 11, 2026
அஸ்வெசும பயனாளிகள் எண்ணிக்கை பாதியாகக் குறைவு; நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்!
செய்திகள்

அஸ்வெசும பயனாளிகள் எண்ணிக்கை பாதியாகக் குறைவு; நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்!

September 11, 2026
கோட்டா சிஐடியில்-விமானக் கொள்வனவுகள் கமிஷன் இல்லாமல் செய்யமுடியாது; சொனால் பெர்னாண்டோ
செய்திகள்

கோட்டா சிஐடியில்-விமானக் கொள்வனவுகள் கமிஷன் இல்லாமல் செய்யமுடியாது; சொனால் பெர்னாண்டோ

September 11, 2026
Next Post
முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு