“ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடிய நிலையில் “ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் விவாதிக்கப்பட்டது.
இந்த விவாதத்தைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 01 வாக்குகளும் கிடைத்தன.

இதன்படி 150 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேறியது.
இதேவேளை இச் சட்ட மூலத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மாத்திரம் வாக்களித்தார்.
அத்துடன், எவரும் வாக்களிப்பை தவிர்க்கவில்லை.
அத்துடன், மூன்றாம் வாசிப்பு திருத்தங்கள் இன்றி இச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது.








