கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கர்ப்பிணி தாய்மார்கள் எதிர்நோக்கிய முக்கிய பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக இயங்காமல் இருந்த மகப்பேற்று விடுதி, மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து நேற்று (15) வைக்கப்பட்டது.

இம்முயற்சி, சந்திவெளி பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் சி. சிவலக்சன் அவர்களின் தனிப்பட்ட முயற்சியாலும், வாழைச்சேனை மகப்பேற்று வைத்தியர்கள் வழங்கிய ஆலோசனைகளாலும் சாத்தியமானது.
மேலும், இந்த திட்டத்தை துரிதப்படுத்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி டாக்டர் ஆர். முரளீஸ்வரன் அவர்களின் நேரடி ஒத்துழைப்பும் கிடைத்தது.
இதன் மூலம், கர்ப்பிணி தாய்மார்களின் சிரமங்கள் குறைக்கப்பட்டதுடன், மக்களின் நலனில் ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.








