Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மறுசீரமைப்பை விரும்பாத இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இழப்பீட்டுடன் விலகலாம்; அமைச்சர் குமார ஜயகொடி

மறுசீரமைப்பை விரும்பாத இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இழப்பீட்டுடன் விலகலாம்; அமைச்சர் குமார ஜயகொடி

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை மின்சார சபையின் (CEB) புதிய மறுசீரமைப்பு மாதிரியை ஏற்க விரும்பாத ஊழியர்கள், இழப்பீட்டுடன் விலகும் வாய்ப்பு பெறுவார்கள் என மின்சார அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

அவர் இந்த அறிவிப்பை, நேற்று (15) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடகச் சந்திப்பில் வெளியிட்டார்.

அமைச்சர் கூறுகையில், மின்சார சபையை நான்கு முக்கிய பிரிவுகளாக – உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் அமைப்பு மேலாண்மை – பிரித்தாலும், உரிமை அரசாங்கத்திற்கே சொந்தமானதாகவே இருக்கும். புதிய பிரிவுகளில் ஊழியர்கள் அனைவரும் இணைக்கப்படுவார்கள் என்றும், இணைவதற்கு விருப்பமில்லாதவர்கள் தன்னார்வத்துடன் விலகும் வாய்ப்பு பெறுவார்கள் என்றும் அவர் விளக்கமளித்தார்.

விலக விரும்பும் ஊழியர்களுக்கு அதிகபட்சம் ரூ. 500,000 வரை இழப்பீடு வழங்கப்படும். மேலும், மின்சார சபை முந்தைய அமைப்பில் தொடர்ந்திருந்தால், ஆகஸ்ட் 27க்கு பின் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த மாதம் 2ஆம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடி பதில்கள் வழங்கப்பட்டபோதும், மறுநாள் புதிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இக்கோரிக்கைகள் நடைமுறைக்கு இயலாதவையாகவும், மின்சார சபை மறுசீரமைப்பை தடுக்க முனைவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!
செய்திகள்

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!

September 9, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
Next Post
அரச அதிகாரிகளுக்கான டிஜிட்டல் கையொப்ப முறை அறிமுகம்

அரச அதிகாரிகளுக்கான டிஜிட்டல் கையொப்ப முறை அறிமுகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு