Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சம்மாந்துறையில் இலவச கண் சத்திர சிகிச்சை முகாம்

சம்மாந்துறையில் இலவச கண் சத்திர சிகிச்சை முகாம்

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி, “சவூதி நூர்” தன்னார்வத் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை இன்று (17) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் ஆரம்பித்து வைத்தார்.

இம்முகாம் செப்டம்பர் 17 முதல் 20 வரை நடைபெறும். இதில் கண்புரை உள்ளிட்ட பல்வேறு கண் நோய்களுக்கான பரிசோதனைகள், சத்திர சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய மருந்துகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

சவூதி அரசின் கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் மற்றும் அல்-பஸர் சர்வதேச அமைப்பு இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டம், பொருளாதார சிக்கலால் சிகிச்சை பெற முடியாத ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி,

உலகளாவிய மனிதாபிமான பணிகளில் சவூதி அரேபியாவின் அர்ப்பணிப்பு மதிப்புகளை பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.

சுகாதாரத் துறையில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் மற்றும் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் வழங்கி வரும் தலைமையைப் பாராட்டினார்.

கிங் சல்மான் உதவி மையம், அல்-பஸர் அமைப்பு மற்றும் சம்மாந்துறை வைத்தியசாலை பணியாளர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் பிரபாஷங்கர், சவூதி அரசின் இம்மனிதாபிமான உதவி இலங்கையுடன் உள்ள நட்பு உறவை மேலும் வலுப்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், “சவூதி நூர்” திட்டத்தின் அடுத்த கட்டமாக, செப்டம்பர் 22 முதல் 28 வரை எம்பிலிபிடிய அரச வைத்தியசாலையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
மணல் அகழ்வு மற்றும் வாள்வெட்டு தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்

மணல் அகழ்வு மற்றும் வாள்வெட்டு தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.