இராணுவ முகாம்களின் ஆயுதங்கள் கணக்கெடுப்பு இறுதி கட்டத்தில்.
நாடு முழுவதிலும் இராணுவ முகாம்களின் களஞ்சியசாலைகளில் உள்ள ஆயுதங்களை கணக்கெடுக்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார்.
கணக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் எவ்வகையான ஆயுதங்கள் காணாமல் போயுள்ளன என்பதை பற்றி துள்ளியமாக தகவல்களை வெளியிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு ஆயுதத்தின் தொடர் எண்கள் மற்றும் பொறுப்புக் குறிப்புகளை சரிபார்க்க வேண்டியுள்ளதால் இந்நடவடிக்கை சிக்கலானதாகவும் அதிக நேரம் பிடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இடம்பெறும் குற்றச்சாட்டுடன் பாதுகாப்பு படையினருக்கும் தொடர்பிருப்பதாகவும், அதற்காக இராணுவ தளங்களில் காணப்படும் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
ஒரு இராணுவ தளத்தில் இருந்து T56 ஆயுதங்கள் 73 காணாமல் போயுள்ளதாகவும், அவை தற்போது பாதாளக் கும்பல்களில் கைகளில் உள்ளதாகவும் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, இராணு தளங்களில் காணப்படும் ஆயுதங்கள் பற்றி கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.








