த.வெ.க. தலைவர் விஜய்க்கு வரும் கூட்டம் வாக்காக மாறாது எனவும் அது தனக்கும் பொருந்தும் என மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல் கூறியுள்ளார்.
த.வெ.க. கட்சியைத் தொடங்கி உள்ள நடிகர் விஜய், சனிக்கிழமைகளில் பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று (20) நாகப்பட்டினத்தில் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலிடம், ‘விஜய்க்கு வரும் கூட்டம் வாக்காக மாறுமா’ எனக் கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த கமல், ‘விஜய்க்கு வரும் கூட்டம் வாக்காக மாறாது. இது எனக்கும் பொருந்தும். கூட்டம் வாக்காக மாறாது என்பது அனைத்து தலைவர்களுக்கும் பொருந்தும், தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது’ என்றார்.
மேலும், விஜய்க்கு என்ன ஆலோசனை கூற விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த கமல், ‘நல்ல பாதையில் செல்லுங்கள். தைரியமாக முன்னேறுங்கள். மக்களுக்கு நன்மை செய்யுங்கள்’ என்றார்.








