Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைதிறப்புக்கு வர்த்தக சங்கம் கண்டனம்

கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைதிறப்புக்கு வர்த்தக சங்கம் கண்டனம்

1 year ago
in செய்திகள்

கிளிநொச்சி வர்த்தக சமூக அபிவிருத்தி சங்கத்தினர், கிளிநொச்சி பகுதியில் உள்ள வர்த்தக ஸ்தாபன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து நேற்றையதினம் (21) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வர்த்தக சங்கத்தின் தீர்மானத்தை மீறி ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்படும் ஒருசில வர்த்தக ஸ்தாபனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இது குறித்து வர்த்தக சங்கத்தின் உப தலைவர் கருத்து தெரிவிக்கையில்,

”திருத்தகம், மருந்தகம் மற்றும் உணவகம் ஆகிய முக்கிய சேவைகளை செய்யும் வர்த்தக ஸ்தாபனங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக ஸ்தாபனங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் மூடுமாறு வர்த்தக சங்கத்தினால் யாப்பின் பிரகாரம் தீர்மானம் எடுக்கப்பட்டது.

எமது சங்கத்தின் பகுதிக்கு 636 கடைகள் உள்ளன. அதில் நான்கு கடைகள் மாத்திரம் ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்து வியாபார நடவடிக்கைகளை ஈடுபடுகின்றனர்.

அத்துடன் அதிகூடிய இலாபம் ஈட்டும் நோக்குடன் பொருட்களை விற்பனை செய்து மக்களுக்கு இடையூறு விளைவிக்கின்றனர். ஆகவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஏனைய கடையின் உரிமையாளர்கள் அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.

அனைவரும் இணைந்து கடைகளை பூட்டுமாறு அவர்களுக்கு கூறியும் அவர்கள் அதனை செவிமடுக்காமல் செயல்படுகின்றனர்.

திறந்திருக்கின்ற கடைகளில் கஞ்சா வியாபாரம், ஹெரோயின் வியாபாரம், சமூக சீர்கேடான விடயங்கள் அதிகம் நடப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது.

அதனடிப்படையிலும், வேலை செய்கின்ற பணியாளர்களுக்கு ஒரு விடுமுறை வேண்டும் என்ற அடிப்படையிலுமே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு பதில் கூற வேண்டிய ஒரு தரப்பினராக நாங்கள் உள்ளோம். எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்து வியாபார நடவடிக்கைகள் ஈடுபடும் இந்த கடைகள் மூடப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு
செய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு

September 24, 2026
நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
செய்திகள்

நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

September 24, 2026
“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!
சினிமா

“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!

September 24, 2026
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!
செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

September 24, 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
Next Post
2 கொள்கலன்கள் உள்ளன மிகுதி 321 கொள்கலன்கள் எங்கே?; அரசை பார்த்து நாமல் கேள்வி!

2 கொள்கலன்கள் உள்ளன மிகுதி 321 கொள்கலன்கள் எங்கே?; அரசை பார்த்து நாமல் கேள்வி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு