Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருமலையில் புத்த விகாரைகள் அதிகரிப்பு; நீண்டு கொண்டே போகும் பட்டியல்!

திருமலையில் புத்த விகாரைகள் அதிகரிப்பு; நீண்டு கொண்டே போகும் பட்டியல்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

238 சிங்கள – பௌத்த மக்கள் மட்டுமே வாழும் திருகோணமலையின் – குச்சவெளி பிரதேச செயலர் பிரிவில் 23 விகாரைகள் அல்லது பௌத்த வழிபாட்டிடங்கள் நிர் மாணிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில இன்னும் கட்டுமானப் பணியில் உள்ளன என்று அறிய வருகின்றதுதென்னமரவாடி கிராம அலுவலர் பிரிவில் பௌத்தர்கள் இருவரே வசிக்கின்றனர். இந்நிலையில், இங்கு சங்கமலை புராண ரஜமகா விகாரை நிறுவப்படுகின்றது. புல் மோட்டை – 4 கிராம அலுவலர் பிரிவில் 98 பௌத்தர்கள் வாழ்கின்றனர். இங்கு, சந்திரபுர புராண ரஜமகா விகாரை, சிறீ தர்மோதய தகம பன்சல என இரு பௌத்த வழிபாட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புல்மோட்டை – 02 கிராம அலுவலர் பிரிவில் 9 பௌத்தர்கள் வாழ்கின்றனர். ஆசிரி ஹந்த புராண ரஜமகா விகாரை அமைபடுகிறது. புல் மோட்டை – 01 கிராம அலுவவலர் பிரிவில் 42 பௌத்தர்கள் வசிக்கின்றனர். இங்கு, சிறீ சத்தர்ம யுத்திக புராண ரஜமகா விகாரை, அத்தனகைகந்த புராண ரஜமகா விகாரை, யனோஜ புராண ரஜமகா விகாரை, மிகிந்துலேனபுராண ரஜமகா விகாரை என 4 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, திரியாய் கிராம அலுவலர் பிரிவில் 29 பௌத்தர்கள் வசிக்கின்றனர். இங்கு, சப்தமகா பபதா வன சேனசுந்த விகாரை, பத்ம ரஜ பப்பத புராண ரஜமகா விகாரை, தபசு கல்லுகு பன்சல என மூன்று பௌத்த வணக்க ஸ்தலங்கள் நிறுவப்பட்டுள்ளன.

குச்சவெளி கிராம அலுவர் பிரிவில் பிச்சாமல் புராண ரஜமகா விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பௌத்தர்கள் இருவரே வசிக்கின்றனர். ஜெய நகரில் 42 பௌத்தர்கள் வசிக்கின்றனர். இங்கு சமுத்திர கிரிபுராண ரஜமகா விகாரை அமைக்கப்பட்டுள்ளது.இதேநேரம் 55 பௌத்தர்கள் வாழும் கும்புறுப்பிட்டி கிழக்கு கிராம அலுவ லர் பிரிவில் பம்பரகலை புராண ரஜமகா விகாரை, தெபரகலை புராண ரஜமகா விகாரை, பாஹிய பவ்வத வனசேனசுந்திர பன்சல, வித்தியலோகா ரஜமகா விகாரை, மகாபோதி விகாரை மற்றும் பௌத்த தியான மண்டபம் என 6 பௌத்த வணக்க ஸ்தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, கும்புறுப்பிட்டி வடக்கில் கொக்கரடி மலை புத்தரய வனசேனசுன பன்சல, கொட்டிகுளம் சங்கரய வன சேனசுன பன்சல, மடுக்குளம் தர்மயவன சேனசுன பன்சல என்று மூன்று பௌத்த வணக்க ஸ்தலங்களும் நிலா வெளியில் ஒரு பௌத்தரே வசிக்கும் நிலையில் அங்கு கண்டல் காடு புராண ரஜமகா விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பௌத்த வழிபாட்டிடங்கள் பெருமளவானவை கோட்டாபய ராஜ பக்ஷ ஜனாதிபதியாக இருந்த சமயத்தில் அமைக்கப்படுவதற்கு நிதியும் அனுமதி யும் வழங்கப்பட்டன என்று கூறப்படு கின்றது. குச்சவெளி பிரதேச செயலர் பிரிவில் 13 ஆயிரத்து 660 இஸ்லாமியர்களும் 4 ஆயிரத்து 552 இந்துத்தமிழர்களும் வாழ்கின்றனர். இதில், 14 விகாரைகள் அல்லது பௌத்த வழிபாட்டிடங்கள் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும், 9 விகாரைகள் அல்லது வழிபாட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகின்றது.

தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் வாழ்ந்த திருகோணமலை மாவட்டத்தில் 1947 ஆம் ஆண்டு கந்தளாய்
குடியேற்றத் திட்டம் முதல் காலத்துக்கு காலம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. திட்டமிட்ட வகையில் குடிப்பரம்பல் மாற்றியமைக் கப்பட்ட இந்த மாவட்டத்தில் தற்போது தமிழ் மக்கள் சிறுபான்மையின ராக உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி ரணில்!

அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி ரணில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.