ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப் ரெம்பர் மூன்றாவது வாரத்தில் அமெரிக்கா செல்லவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 78ஆவது அமர்வு எதிர்வரும் செப்ரெம்பர் 5ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
“நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒற்றுமையை மீண்டும் உருவாக்குதல்“ என்ற கருத்திட்டத்தின் கீழ் இம்முறை பொது சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.இதேவேளை, கியூபாவில் எதிர்வரும்
செப்ரெம்பரில் நடைபெறவுள்ள குழு 77 (பு77) பிளஸ் சீனா உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கியூப பயணத்தின் பின்னர் ஜனாதிபதி அமெரிக்கா செல்லவுள்ளார் என்ப தும் குறிப்பிடத்தக்கது.