Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் வழிகாட்டலில் கரையோர சுத்தப்படுத்தல் மற்றும் பனம் விதை நடுதல் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் வழிகாட்டலில் கரையோர சுத்தப்படுத்தல் மற்றும் பனம் விதை நடுதல் நிகழ்வு

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமான கரையோரப் பிரதேசங்களை சுத்தம் செய்யும் வேலைதிட்டம் மற்றும் பனம் விதை நடுகை செய்யும் நிகழ்வுகளானது இன்றைய தினம் (24) பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் இடம்பெற்றது.

இந்த சுத்தப்படுத்துகை நிகழ்வுகளானது கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் “கிழக்கு கரையோரங்களை தூய்மையாக பேணுதல்” எனும் திட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் குருக்கள்மடம் தொடக்கம் பெரியகல்லாறு வரையான கரையோர பிரதேசங்கள் சுத்தம் செய்யப்பட்டதுடன், அந்த பிரதேசங்களில் ஏற்படும் மண்ணரிப்பை தடுக்கும் முகமாக பனம் விதைகளும் நடுகை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், களுதாவளை பிரதேச சபை தவிசாளர் மே. வினோராஜ், சுற்றாடல் உத்தியோகத்தர் (மத்திய சுற்றாடல் அதிகார சபை), கடல் சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர், பாதுகாப்பு படையினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வுகளை பிரதேச செயலக கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஆ. ஜெயரூபன் மற்றும் யோ. நிசந்தராசன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
வாழைச்சேனையில் பூலாக்காடு சீல்லிக்கொடிமடுவுக்கு மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் யானை தாக்கி உயிரிழப்பு

வாழைச்சேனையில் பூலாக்காடு சீல்லிக்கொடிமடுவுக்கு மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் யானை தாக்கி உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு