Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“தமிழ் தேசியம் என்பது ஒரு கட்சியல்ல அது ஒரு தேசிய இனம்”; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

“தமிழ் தேசியம் என்பது ஒரு கட்சியல்ல அது ஒரு தேசிய இனம்”; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

10 months ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள்

தமிழ் தேசியம் என்பது ஒரு கட்சியல்ல அது ஒரு தேசிய இனம் உலகில் உள்ள தேசிய இனங்களில் தமிழ் தேசிய இனமும் ஒன்று என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (22) மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மகிழவெட்டுவான் விவேகானந்தா விளையாட்டு கழகத்திற்கான சீருடைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

கடந்த 75 வருடங்களாக வடகிழக்கில் அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்று அபிவிருத்திகளை செய்தவர்களை இன்று மக்கள் புறகணித்துள்ளனர். அத்துடன் அவர்களை அவர்கள் சார்ந்த கட்சிகளும் புறக்கணித்துள்ளன. காரணம் அவர்கள் என்னதான் அபிவிருத்திகளை செய்தாலும் அவர்கள் அரசுடன் இணைந்து செயற்பட்டது தங்களுக்கு சலுகைகள் கிடைக்கும் என்ற நோக்கத்திற்காகவே. அதனை அரச கட்சிகள் தெரிந்து கொண்டு ஒரு காலத்தில் அவர்களை கைவிட்டு விடுகின்றனர்.

ஆனால் தமிழரசுக் கட்சி என்பது தமிழ் தேசியத்தின் வழியில் பயணிக்கும் ஒரு கட்சி என்பதால் தான் அது கடந்த 75 ஆண்டுகளாக வடகிழக்கில் வெற்றி பெற்று வருகிறது.

காரணம் தமிழரசுக் கட்சி ஒரு தேர்தலுக்கான கட்சி அல்ல. அது வடகிழக்கில் உள்ள மண்ணுக்கும் மக்களுக்குமான கட்சி. இந்த கட்சியை தந்தை செல்வா உருவாக்கும் போது வெறுமனே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்காக உருவாக்கவில்லை.

தமிழ் அரசு என்பது வடகிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கான நிழல் அரசாக செயற்பட வேண்டும் என்ற நோக்கிலே அந்த கட்சி உருவாக்கப்பட்டது.

அந்த வகையில் தமிழ் தேசியத்தை வளர்ப்பதில் நாம் முன் நின்று செயற்பட வேண்டும். இலங்கையில் தமிழ் தேசியம் என்பது இலங்கையின் சிங்கள தேசியத்தில் இருந்து எந்த இடத்தில் வேறுபடுகிறது என்பதுதான் கேள்வி. வடகிழக்கில் உள்ள மக்கள் சிங்கள பெரும்பான்மை அரசுக்கு நிகரான கட்டமைப்புகளை கொண்டு விளையாட்டுத்துறை, விவசாயம், கல்வி என அனைத்து துறைகளிலும் முன்னெற வேண்டும். அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி செயற்படுவதற்கான வளங்களையும், உதவிகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.

எமது இளைஞர்கள் எதிர் காலத்தில் இலங்கை தேசிய அணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக எமது புலம்பெயர் சமூகமும் உதவிகளை வழங்க வேண்டும். புலம்பெயர் சமூகம் நினைத்தால் வடகிழக்கில் அரசுக்கு இணையான பொருளாதார கட்டமைப்புகளை உருவாக்கி செயற்பட முடியும் என தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சீனாவில் தயாரிக்கப்படும் மனித உருவ ரோபோக்களுக்கு அமெரிக்கா தடை!
உலக செய்திகள்

சீனாவில் தயாரிக்கப்படும் மனித உருவ ரோபோக்களுக்கு அமெரிக்கா தடை!

July 29, 2026
அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
செய்திகள்

அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

July 29, 2026
எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையற்ற நாட்டை உருவாக்குவதே இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையற்ற நாட்டை உருவாக்குவதே இலக்கு; ஜனாதிபதி அநுர!

July 29, 2026
பாணத்துறையில் பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தவறான முடிவு!
செய்திகள்

பாணத்துறையில் பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தவறான முடிவு!

July 29, 2026
ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!
செய்திகள்

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!

July 29, 2026
அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!
உலக செய்திகள்

அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!

July 29, 2026
Next Post
திருகோணமலையில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்ப்பு

திருகோணமலையில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.