Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
LGBTQ நாடாக இலங்கை மாறி வருகிறதா?; சபையில் அர்ச்சுனா கருத்து

LGBTQ நாடாக இலங்கை மாறி வருகிறதா?; சபையில் அர்ச்சுனா கருத்து

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை தற்போது LGBTQ நாடாக மாறி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், தமிழர்கள் என அழகாக வாழ்ந்து வந்த இந்த நாடு தற்போது LGBTQ நாடாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை போதைப்பொருள் எனக் கூறிய அவர், அந்த போதைப்பொருள் கொள்கலன்களைக் கொண்டுவந்தது யார்? வெளியில் அனுப்பியது யார்? எனக் கேள்வி எழுப்பினார்.

குறித்த கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்ததா? இல்லையா? என்பது தொடர்பில் அன்று நான் கருத்துரைத்த போது என்னைப் பைத்தியக்காரன் எனக் கூறினார்கள்.

அவ்வாறு என்னைப் பார்த்துக் கூறும் போது வைத்தியர் என்ற ரீதியில் யாரையும் பைத்தியக்காரன் என்று கூறமுடியாது, அவ்வாறு கூறக்கூடாது என சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதால் அவற்றைப் பொறுத்துக் கொண்டிருந்தேன்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ள 159 பேருக்கும் கொள்கை இல்லாவிட்டாலும் வைத்தியர் என்ற ரீதியில் தனக்குக் கொள்கை இருப்பதாக அர்ச்சுனா தெரிவித்தார்.

நாடாளுமன்றுக்குள் பைத்தியக்காரத்தனம் செய்யும் சிலர் இருப்பதாகவும் அவர்கள் செய்யும் பைத்தியக்காரத்தனத்தை ஒரு வருட காலமாகப் பார்த்துக் கொண்டு வாயை மூடிக்கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு தற்போது அமைப்பு மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு LGBTQ இற்கு அழகான நாடு, எமது நாட்டில் உள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவ்வாறு நடக்குமானால் எதிர்காலத்தில் நாடாளுமன்றில் முன்னாள் உள்ள ஆசனங்களில் பல வேடிக்கைகளைக் காணக்கூடியதாக இருக்கும் எனவும் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்
செய்திகள்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்

July 26, 2026
பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்
செய்திகள்

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்

July 26, 2026
ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்
செய்திகள்

ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்

July 26, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா

July 26, 2026
வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா
செய்திகள்

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா

July 26, 2026
1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்
செய்திகள்

1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்

July 26, 2026
Next Post
யாழில் உயிரிழந்த இரட்டை குழந்தைகளின் தாயும் உயிரிழப்பு!

யாழில் உயிரிழந்த இரட்டை குழந்தைகளின் தாயும் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு