உலக இருதய தினத்தை முன்னிட்டு, பொது மக்களுக்கு இருதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (30) கல்முனையில் இடம்பெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில்? பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ,எம்.எஸ்.இர்ஷாட்டினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழிப்புணர்வு நிகழ்வு சைக்கிள் ஓட்டம், நடைபவனி, தொங்கோட்டம், துண்டுப்பிரசுரம் விநியோகம் அடங்களாக பேரணியாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வரை சென்றதுடன் அங்கிருந்து அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வரை சென்று மீண்டும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினை வந்தடைந்தது.











