Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நுவரெலியாவில் மாநகர ஆணையாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு; நடைபாதை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியாவில் மாநகர ஆணையாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு; நடைபாதை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

11 months ago
in செய்திகள்

நுவரெலியாவில் நடைபாதை வியாபாரிகள் வீதியோரங்களில் பல தலைமுறைகளாக வியாபாரம் செய்கின்றனர் எனினும் தற்போது நுவரெலியா மாநகர சபை மாநகர ஆணையாளரின் நடவடிக்கையானது நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதற்கு எதிராக நேற்று முன்தினம் (30) நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மாநகர ஆணையாளரின் நடவடிக்கைகளுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் – தற்போதைய அரசாங்கத்தின் ஊடாக நுவரெலியாவில் பல்வேறு சுற்றுலா அபிவிருத்தி திட்டங்கள் முன்வைக்கின்ற போதிலும் அவை அனைத்துக்குமே நுவரெலியா மாநகர சபை மாநகர ஆணையாளரின் நடவடிக்கையானது தடையாக உள்ளது.

நுவரெலியா மாநகரசபை சட்டங்களினால் மாநகர சபைக்கு கிடைக்கப்பெறுகின்ற அதிகாரங்களின் படி பணிகள் அல்லது வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும்போது அதனை சவாலுக்குட்படுத்தி பொது மக்களுக்கு ஆற்றும் சேவைகளை தடுத்தல் மற்றும் சேவைகள் வழங்குவதனை இல்லாதொழிப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

அது போலவே வீதியோர வியாபாரிகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதில்லை. எங்களுடைய வியாபாரத்திற்கும் பாரிய இடையூறுகளை உருவாக்குகின்றார்.

எனவே பொதுமக்களுக்கு நலம் பெறும் வகையில் சேவையாற்றும் புதிய மாநகர ஆணையாளர் எங்களுக்கு வேண்டும் அப்போதுதான் நுவரெலியா நகரம் அபிவிருத்தியை நோக்கி நகரும் எனவும் அத்துடன் நடைபாதை வியாபார ஒழுங்கு முறை சட்டத்தின்படி வியாபாரம் செய்ய ஒழுங்குபடுத்தி கொடுக்க வேண்டும்.

வியாபாரிகளை அப்புறப்படுத்தி அவர்கள் மீது அடக்குமுறையை திணிக்க கூடாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை!
செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை!

September 11, 2026
பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; 90 வயதில் மறைவு!
செய்திகள்

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; 90 வயதில் மறைவு!

September 11, 2026
FCID-யிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ!
செய்திகள்

FCID-யிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ!

September 11, 2026
Next Post
திருட்டுச் சம்பவத்தில் தேடப்படும் பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

திருட்டுச் சம்பவத்தில் தேடப்படும் பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு