அமெரிக்காவுடன் இணைந்து கொள்ள கனடாவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.
அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா இணைந்தால், அமெரிக்காவின் முன்னேற்றமான Golden Dome வான் பாதுகாப்பு திட்டத்தை கனடா இலவசமாகப் பெறும் வாய்ப்பு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற கருத்துகளை முன்பும் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், இதனால் அமெரிக்கா-கனடா உறவுகள் தொடர்பாக புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.








