ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் கிழக்கு கிராம சேவகர் பிரிவு கடற்கரையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 100 கடற்கரை பூங்காவை நிர்மாணிக்கும் நிகழ்விற்கான அடிக்கல் நாட்டு விழாவானது 01.10.2025 அன்று இடம்பெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு , மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஷ் , உதவி பிரதேச செயலாளர் திரு. சூரியகுமார் பார்த்தீபன் , பிரதேச சபை தவிசாளர் திரு.காந்தலிங்கம் செந்தில்குமார் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு சிறப்பான நடைபெற்றிருந்தது
























