அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப், ஹமாஸுடன் ஒப்பந்தம் எட்டுவதற்கான காலக்கெடுவை அறிவித்துள்ளார்.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்குள் (வொஷிங்டன் நேரப்படி) ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
“மத்திய கிழக்கில் ஏதேனும் ஒரு முறையில் அமைதி ஏற்பட வேண்டும். வன்முறையும் இரத்தப்பாய்ச்சலும் நிறுத்தப்பட வேண்டும். இறந்தவர்களின் உடல்கள் உட்பட, அனைத்து பணயக்கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்,” என அவர் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.










