Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ்ஸும் லொறியும் விபத்து; மூவர் உயிரிழப்பு

அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ்ஸும் லொறியும் விபத்து; மூவர் உயிரிழப்பு

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாரம்மல – குருணாகல் வீதியில் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான சபை பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகலிலிருந்து நாரம்மல நோக்கி பயணித்த லொறியின், சாரதி கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கத்தை விட்டு விலகி, கட்டுநாயக்காவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ்ஸூடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் லொறி சாரதி, ஆண் ஒருவர், பெண்கள் இருவர் மற்றும் சிறுவர்கள் இருவர் ஆகியோர் காயமடைந்து நாரம்மல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, சிகிச்சை பலனின்றி லொறியில் சாரதி, ஆண் ஒருவர் மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பொலன்னறுவையைச் சேர்ந்த 41, 80 மற்றும் 82 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேவேளை, லொறியில் பயணித்த 40 வயதுடைய பெண், 16 மற்றும் 9 வயதுடைய சிறுவர்கள் இருவர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாரம்மல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகளை கைப்பற்றிய தமிழக பொலிஸார்

இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகளை கைப்பற்றிய தமிழக பொலிஸார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு