இலங்கையில் இளம் வயதினரிடையே HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள் மத்தியில் புதிய HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது கவலையளிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிறைவடையும் வரையில், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிவில் 88 புதிய HIV தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 78 பேர் 20 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் மாதவி குணரத்ன இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மேலும், 2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு முடிவடையும் போது நாடளாவிய ரீதியில் 708 புதிய HIV தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1987ஆம் ஆண்டு இலங்கையில் முதலாவது HIV தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதிலிருந்து இதுவரை மொத்தமாக 8,111 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர் சமூகத்தினரிடையே HIV தொற்று தொடர்பான விழிப்புணர்வு, பாதுகாப்பான பாலியல் நடைமுறைகள் மற்றும் உரிய மருத்துவப் பரிசோதனைகளின் அவசியம் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக இந்தத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.







