Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டிற்கு வரும் மேலதிக விமானங்களை திருப்பி அனுப்பப்போகும் அரசு; இனவாதம் என சாணக்கியன் குற்றச்சாட்டு

நாட்டிற்கு வரும் மேலதிக விமானங்களை திருப்பி அனுப்பப்போகும் அரசு; இனவாதம் என சாணக்கியன் குற்றச்சாட்டு

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

அரசாங்கம் மறைமுகமாக இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றச்சாட்டு முனைவைத்துள்ளார்.

களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்த அவர்,

இந்த அரசாங்கம் அடுத்த ஆறு மாத காலத்தில் இலங்கைக்கு வர இருக்கும் மேலதிக விமானங்களை வரவேண்டாம் என்று தடுத்திருக்கின்றது. இதற்கான காரணம் பண்டாரயநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு தற்போது வரும் விமானங்களை விட மேலதிக விமானங்கள் வருவதற்கு இடமில்லை வந்தால் திருப்பி அனுப்ப வேண்டிய நிலை வரும் என்று சொல்லியிருக்கின்றார்கள்.

இது எவ்வளவு ஒரு மறைமுக இனவாதம் என்று பாருங்கள். வடக்கிலே பலாலி விமான நிலையம் இருக்கின்றது. மத்தளை விமான நிலையமும் இருக்கின்றது. மத்தளையிலே அவர்கள் விமானத்தை இறக்குவதற்கு விரும்பவில்லை. இந்த விமானங்களிலே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை விடுத்து மற்றையவர்கள் பெரும்பாலும் வடக்கு கிழக்கிலே வசிக்கும் வெளிநாட்டு வாழ் பிரஜைகளாகவே இருப்பார்கள்.

இந்தப் புலம்பெயர் தேசத்தில் இருந்து வரும் மக்கள் மத்தளைக்குச் சென்று, மத்தளையில் இருந்து 20 மணித்தியாளங்கள் பஸ் பயணம் செய்வதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். எனவே பலாலி விமான நிலையத்தைப் புனரமைப்புச் செய்தால் மேலதிக விமானங்களை அங்கே இறக்க முடியும்.

இவ்வாறானதொரு தூரநோக்குப் பார்வையுடன் நாங்கள் ஒரு தனி அரசாக தமிழரசுக் கட்சி சில யோசனைகளை முன்வைத்து வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கட்டியழுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே இருக்கின்றேம். இதன் காரணமாகத்தான் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். அப்போதுதான் இந்த விடயங்களை நாங்களே கையாளக் கூடிய சூழலுக்கு வரலாம்.

இந்த நிலைமைகளில் இந்த அரசானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக் கூறல் விடயத்திலும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம், துரோகம், நல்லிணக்கம் சம்மந்தமான விடயத்திலும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம், துரோகம் மாற்றும் பொருளாதாரம் சம்மந்தப்பட்ட விடயத்திலும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம், துரோகமே இளைத்துள்ளது என்று தெரிவித்தார்.

தமிழர் மாவட்டங்களை இணைக்கும் அதிவேகநெடுஞ்சாலை அமைக்க பேசி வருகிறோம்; சாணக்கியன்
Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது
செய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

September 9, 2026
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!
உலக செய்திகள்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

September 9, 2026
2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
அரசியல்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

September 9, 2026
Next Post
இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனம் குறித்து வலுக்கும் சர்ச்சை

இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனம் குறித்து வலுக்கும் சர்ச்சை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு