Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கம்மன்பிலவின் கருத்துக்கு ஜனா எம்.பி பதிலடி!

கம்மன்பிலவின் கருத்துக்கு ஜனா எம்.பி பதிலடி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் போட்சிற்றி என்பனவற்றினை சீனாவுக்கு வழங்கியபோது வாய்திறக்காத பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்தியாவுக்கும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைக்க நடவடிக்கையெடுக்கும்போது மட்டும் மக்கள் கருத்துப்பெறவேண்டும் என்பது அவரின் ஒரு பக்க செயற்பாட்டினை காட்டுவதாகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடகிழக்கில் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் வடக்கில் மன்னாரிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கு நாங்கள் எமது முழுமையான ஆதரவினை வழங்குகின்றோம்.அத்துடன் அனைவரும் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு இனக்கலவரம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சநிலை தமிழ் மக்கள் மத்தியில் உருவெடுத்திருந்தாலும் ஒவ்வொரு தேர்தல்கள் வரும்காலத்திலும் இனவாதத்தினை தூண்டிவிட்டு அரசியல்செய்வது இந்த நாட்டில் வழமையாகிவிட்டது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தமக்கு சாதமாக பயன்படுத்தி தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய ஒருவர் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதை பூதாகரமாக்கி ஜனாதிபதி தேர்தலில்வெற்றிபெற்றார்கள்.

எதிர்வரும் ஆண்டும் ஓரு தேர்தல் ஆண்டாகயிருக்கப்போகின்றது.இதனை மையமாகக்கொண்டு ஒரு சில இனவாதிகள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களை சுற்றிவளைக்கவேண்டும் என்றும்,வடகிழக்கில் பௌத்தமதத்திற்கு எதிராக தமிழர்கள் செயற்படுகின்றார்கள் என்று இனவாதத்தினை வெளிக்கிளப்பி கஜேந்திரகுமார் எம்.பியின் வீட்டுக்கு முன்பாகவும் இரண்டு தினங்களாக ஆர்ப்பாட்டங்களை செய்திருந்தார்கள்.இதனை நாங்கள் வன்மையாக கண்டிகின்றோம்.

பாராளுமன்ற உதய கம்பன்பில கூறுகின்றார் வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் கொழும்பில் சிங்களவர்களின் தலைநகரத்தில் தமிழர்களுக்கு என்னவேலையென்று.வடகிழக்கில் நீங்கள் வந்து அடாத்தாக கூடியேறுகின்றீர்கள்,ஆனால் கொழும்பிலும் தெற்கிலும் தமிழர்கள் அடாத்தாக குடியேறவில்லை என்பதை உதய கம்பன்பில போன்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். நீங்களே கொழும்பு சிங்கள தலை நகரம் வடக்கு கிழக்கு தமிழர்கள் தாயகம் என்றால் பாராளுமன்றத்தில் நீங்களே வடக்கு கிழக்கினை பிரித்து எங்களை தனிநாடாக பிரகடனப்படுத்திவிட்டால் எல்லோருக்கும் அதுவசதியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
Next Post
தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் தற்கொலை!

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் தற்கொலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.