Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

28 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை, பள்ளியவத்தை – டேன் லங்கா வீதியில் உள்ள வீடொன்றில் 18 வயதுடைய யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதி தனது பெற்றோரின் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்னர் வந்து தங்கியிருந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த யுவதி மற்றும் சந்தேகநபர் இடையே காதல் உறவு இருந்ததாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, யுவதியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நஞ்சு அருந்தி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், குறித்த சந்தேகநபர் கடந்த 2020ஆம் ஆண்டு அவசகவெல்ல பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் எனவும், அந்த வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வத்தளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், கொலைக்கான முழுமையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!
செய்திகள்

துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!

September 5, 2026
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!
செய்திகள்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!

September 5, 2026
Next Post
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு