எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், பால் தேநீர் மற்றும் பிளேன் டீயின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் மதுபான விடுதி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கோப்பை பால் தேநீர் மற்றும் ஒரு கோப்பை பிளேன் டீ ஆகியவற்றின் விலை இன்று (05) நள்ளிரவு முதல் தலா 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
எரிவாயு விலை குறைப்பின் பயனை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், சிற்றுண்டிகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது எனவும் அகில இலங்கை உணவக மற்றும் மதுபான விடுதி உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.








