Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

14 minutes ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய வருடாந்த பாதயாத்திரை இன்று (05) சனிக்கிழமை அதிகாலை பக்தி உணர்வுடன் நடைபெற்றது.

மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் பாதயாத்திரையில் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

புனித மடு பேராலயத்திற்கு அடுத்ததாக அதிகளவான பக்தர்கள் பாதயாத்திரையாகச் செல்லும் முக்கியமான திருத்தலமாக ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலயம் விளங்குகின்றது.

இவ்வாண்டுக்கான பாதயாத்திரை மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்ற விசேட திருப்பலியைத் தொடர்ந்து காலை 5.30 மணியளவில் ஆரம்பமானது.

பாதயாத்திரையில் விசேட சொரூபமும் பக்தர்களால் எடுத்துச் செல்லப்பட்டது. புளியந்தீவிலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை வீச்சுக்கல்முனை சந்தனமாதா ஆலயம் ஊடாகச் சென்று, வலையிறவுப் பாலத்தைக் கடந்து வவுணதீவு வழியாக ஆயித்தியமலை திருத்தலத்தை சென்றடைந்தது.

இதேவேளை, செங்கலடி பகுதியிலிருந்தும் இன்று அதிகாலை ஆயித்தியமலை நோக்கி மற்றுமொரு பாதயாத்திரை இடம்பெற்றதுடன், அதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா நாளை (06) ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளது.

திருவிழாவின் இறுதி நாளை முன்னிட்டு நாளை அதிகாலை 5 மணிக்கு சிங்கள மொழியிலான முதல் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு வரவேற்பு நிகழ்வுடன் பெருவிழா கூட்டுத்திருப்பலியும் இடம்பெறவுள்ளது.

அன்னையின் இறுதி பெருவிழா கூட்டுத்திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகரும் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயருமான பேரருட்தந்தை பி. அன்டன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெறவுள்ளதுடன், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை அவர்களால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

இதனையடுத்து, ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா நிறைவுபெறவுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
Next Post
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் 'CIPCC' பீஜிங்கில் ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு