ஓட்டமாவடி – நாவலடியில் இன்று (08) காலை இடம்பெற்ற சாலை விபத்தில் 63 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நாவலடி இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரணமடைந்தவர் ஓட்டமாவடி–1 மர்கஸ் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த சீனி முகம்மது இப்ராகீம் (63) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காலையில் வயல் வேலைக்காக துவிச்சக்கர வண்டியில் பயணித்தபோது, எதிர்திசையில் வந்த கார் அவர் மீது மோதியதில் கடுமையாக காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.
இப்ராகீமின் உடல் வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









