தையிட்டியில் மக்களின் காணியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரையை அகற்ற கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தொடர்ச்சியாக போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் இன்று (29) மீண்டும் போராட்டம் மேற்க்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (29) பி.ப 4.00 மணிக்கு ஆரம்பித்து, நாளை (30) மாலை 7.00 மணிக்கு நிறைவுபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எமது மக்களின் எதிர்ப்பைக்க காட்ட அனைவரையும் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அறிவித்துள்ளனர்.