போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளைத் தயாரித்து, வைத்திருந்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுகேகொட பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன்தினம் புதன்கிழமை (11) மாலை வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்கபுர சந்தியில் வைத்து, போலி சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 12 போலி சாரதி அனுமதிப்பத்திரங்களும் 8 போலி தேசிய அடையாள அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் அங்கொட மற்றும் நாரஹேன்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 32 மற்றும் 52 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நுகேகொட பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







