மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சுனில் செனவிரத்ன (78) திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அவர், குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு (11) சிறைச்சாலை வளாகத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவரது திடீர் மரணம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.







