Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் மத உரிமைகளைப் பாதுகாக்க புதிய சுற்றறிக்கை கோரிக்கை!

கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் மத உரிமைகளைப் பாதுகாக்க புதிய சுற்றறிக்கை கோரிக்கை!

26 minutes ago
in செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் ஆறு முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் மத மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குமாறு Centre for Social Studies (CSS) அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ள நிலையில், அவற்றைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என CSS வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக CSS அமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், கடந்த 10.11.2026 அன்று பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, அரச சேவையில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் மதச் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக புதிய சுற்றறிக்கையொன்றை வெளியிட வேண்டியதன் அவசியம் எடுத்துரைக்கப்பட்டது.

குறித்த பரிந்துரைகள் சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டிலுள்ள அனைத்து அரச திணைக்களங்களிலும் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் மத, கலாசார மற்றும் பண்பாட்டு அடையாளங்களுக்கான உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என CSS தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க உள்ளதாக அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரச நிறுவனங்களில் பணியாற்றும் எந்தவொரு உத்தியோகத்தரும் தமது மத மற்றும் கலாசார அடையாளங்களைப் பிரதிபலிக்கும் ஆடைகளை அணிவதற்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் தெளிவான நிர்வாக வழிகாட்டுதல்களையும் புதிய சுற்றறிக்கையையும் விரைவில் வெளியிட வேண்டும் என அந்த அமைப்பு கோரியுள்ளது.

அத்துடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக CSS மேலும் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் உயிரிழப்பு!
செய்திகள்

மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் உயிரிழப்பு!

November 12, 2026
அரச ஊழியர்கள் இனி மின்சார வாகனங்களையே வாங்க வேண்டும்; இந்திய மத்திய அரசு அதிரடி உத்தரவு!
உலக செய்திகள்

அரச ஊழியர்கள் இனி மின்சார வாகனங்களையே வாங்க வேண்டும்; இந்திய மத்திய அரசு அதிரடி உத்தரவு!

November 12, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும்; அமைச்சர் லால் காந்த உறுதி!
அரசியல்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும்; அமைச்சர் லால் காந்த உறுதி!

November 12, 2026
மட்டக்களப்பில் நேற்று முன்னெடுத்த சோதனையில் மது மற்றும் போதைபொருள் பாவித்த 23 பேர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் நேற்று முன்னெடுத்த சோதனையில் மது மற்றும் போதைபொருள் பாவித்த 23 பேர் கைது

November 12, 2026
76 ஆண்டுகளாகச் சீரழிந்த நாட்டை இரண்டே ஆண்டுகளில் மாற்ற முடியாது; அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி!
செய்திகள்

76 ஆண்டுகளாகச் சீரழிந்த நாட்டை இரண்டே ஆண்டுகளில் மாற்ற முடியாது; அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி!

November 12, 2026
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது!
செய்திகள்

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது!

November 12, 2026
Next Post
மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் உயிரிழப்பு!

மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு