Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச ஊழியர்கள் இனி மின்சார வாகனங்களையே வாங்க வேண்டும்; இந்திய மத்திய அரசு அதிரடி உத்தரவு!

அரச ஊழியர்கள் இனி மின்சார வாகனங்களையே வாங்க வேண்டும்; இந்திய மத்திய அரசு அதிரடி உத்தரவு!

14 minutes ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில், அரசு ஊழியர்களின் உத்தியோகபூர்வ பயன்பாட்டிற்காக இனி மின்சார வாகனங்களை மட்டுமே கொள்வனவு செய்ய வேண்டும் என இந்திய மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்தியாவை 2070ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு அற்ற நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கமைய, போக்குவரத்துத் துறையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச எரிசக்தி முகமையின் தகவல்களின்படி, இந்தியாவின் மொத்த கார்பன் உமிழ்வில் போக்குவரத்துத் துறையின் பங்களிப்பு சுமார் 12 சதவீதமாகக் காணப்படுகிறது. அதேவேளை, நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 90 சதவீதம் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் எரிபொருள் இறக்குமதிச் செலவைக் குறைப்பதுடன், காற்று மாசுபாட்டையும் கட்டுப்படுத்த முடியும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இதன் ஒரு பகுதியாக, மத்திய நிதி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிவுறுத்தலின்படி, மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகள் தமது பயன்பாட்டிலுள்ள பெட்ரோல், டீசல் வாகனங்கள் பழுதடைந்து மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்படும்போது, அவற்றுக்குப் பதிலாக மின்சார கார்களையே கொள்வனவு செய்ய வேண்டும்.

எனினும், மின்சார வாகனங்களுக்குப் பதிலாக பெட்ரோல் அல்லது டீசல் கார்களை வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அதற்கான காரணங்களை உள்ளடக்கிய விரிவான திட்ட அறிக்கையை மத்திய செலவினத் திணைக்களத்திடம் சமர்ப்பித்து அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்சார வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான அதிகபட்ச விலை வரம்பு 20 இலட்சம் இந்திய ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் கலப்பின வாகனங்களுக்கான கொள்வனவு வரம்பு 10 இலட்சம் ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் கொள்வனவு விலை மற்றும் நீண்டகால பராமரிப்புச் செலவுகளைக் கருத்திற்கொண்டே இந்த வரம்புகள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அரச அலுவலகங்களில் மின்சார வாகனப் பயன்பாட்டை கட்டாயப்படுத்தும் இந்த நடவடிக்கை, நாட்டின் போக்குவரத்துத் துறையில் பசுமை மாற்றத்தை விரைவுபடுத்தும் முக்கிய முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும்; அமைச்சர் லால் காந்த உறுதி!
அரசியல்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும்; அமைச்சர் லால் காந்த உறுதி!

November 12, 2026
மட்டக்களப்பில் நேற்று முன்னெடுத்த சோதனையில் மது மற்றும் போதைபொருள் பாவித்த 23 பேர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் நேற்று முன்னெடுத்த சோதனையில் மது மற்றும் போதைபொருள் பாவித்த 23 பேர் கைது

November 12, 2026
76 ஆண்டுகளாகச் சீரழிந்த நாட்டை இரண்டே ஆண்டுகளில் மாற்ற முடியாது; அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி!
செய்திகள்

76 ஆண்டுகளாகச் சீரழிந்த நாட்டை இரண்டே ஆண்டுகளில் மாற்ற முடியாது; அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி!

November 12, 2026
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது!
செய்திகள்

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது!

November 12, 2026
சுற்றுலா விசாவில் வேலைக்காக வெளிநாடு செல்வோருக்கு அரசாங்கம் கடும் எச்சரிக்கை!
செய்திகள்

சுற்றுலா விசாவில் வேலைக்காக வெளிநாடு செல்வோருக்கு அரசாங்கம் கடும் எச்சரிக்கை!

November 12, 2026
கல்முனை – கொழும்பு அதிசொகுசு பேருந்து மீது கல்வீச்சு; சாரதி காயம் – வியாபாரப் போட்டி காரணமா?
செய்திகள்

கல்முனை – கொழும்பு அதிசொகுசு பேருந்து மீது கல்வீச்சு; சாரதி காயம் – வியாபாரப் போட்டி காரணமா?

November 12, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு