Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிசால் தாக்கப்பட்ட சட்டத்தரணி; சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை

நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிசால் தாக்கப்பட்ட சட்டத்தரணி; சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கல்கிசை நீதிமன்ற வளாகத்திற்குள் நேற்று முன்தினம் (10) பொலிஸ் அதிகாரி ஒருவரால் சட்டத்தரணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பொலிஸ் அதிகாரி சட்டத்தரணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதை வன்மையாகக் கண்டிப்பதாகவும், எந்தவொரு நபருக்கு எதிராகவும் பொலிஸார் தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் அதனை எதிர்ப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான நகர்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ்மா அதிபரை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள், தான் அந்த சட்டத்தரணியை தாக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இருப்பினும், கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், கான்ஸ்டபிள் அடுத்த திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள், சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டை அளித்தால் அது தொடர்பிலும் விசாரணை நடத்தவுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மயிலத்தமடு மற்றும் மாதவணையில் பண்ணையாளர்களுக்கு நெருக்கடி அதிகரிப்பு
செய்திகள்

மயிலத்தமடு மற்றும் மாதவணையில் பண்ணையாளர்களுக்கு நெருக்கடி அதிகரிப்பு

October 2, 2026
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!

October 2, 2026
ஒரு ஆண்டில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது!
செய்திகள்

ஒரு ஆண்டில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது!

October 2, 2026
எரிபொருள் விலை உயர்வு முழுச் சுமையும் மக்கள் மீது சுமத்தப்படவில்லை!
செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு முழுச் சுமையும் மக்கள் மீது சுமத்தப்படவில்லை!

October 2, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு;  நல்லூரில் 3ஆவது நாளாக போராட்டம்!
செய்திகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு; நல்லூரில் 3ஆவது நாளாக போராட்டம்!

October 2, 2026
நாளை நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்!
செய்திகள்

நாளை நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்!

October 2, 2026
Next Post
“அமைச்சரவை மாற்றத்திற்கு இதுவே காரணம்”; முரண்பாடு என்கிறது மொட்டுக் கட்சி

"அமைச்சரவை மாற்றத்திற்கு இதுவே காரணம்"; முரண்பாடு என்கிறது மொட்டுக் கட்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு