மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்கு மாகாண சோட்டாக்கன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரி மாணவர்கள் பதக்கங்கள் வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் சாம்பியன்ஷிப் – கிழக்கு மாகாணம் 2025 என்ற தலைப்பில் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.
இந்தப் போட்டிகளில் கல்முனையைச் சேர்ந்த JKMO கழகத்தின் நான்கு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் சிறப்பாக விளையாடி W. கேசாந் – தங்கம் மற்றும் வெள்ளி, M. சூரியவர்ஷன் – தங்கம், S. மௌசாந் – தங்கம், S. கிருசாந் – தங்கம் ஆகியோர் பதக்கங்களை வென்றனர்.
மேலும், வரவிருக்கும் தேசிய மட்ட கராத்தே போட்டி 2025 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன்; அந்தப் போட்டிக்காக JKMO கழகத்தில் இருந்து நான்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதேசமயம் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த சிகான் S. முருகேந்திரனுக்கும், ஆதரவு உதவிகள்வழங்கிய சென்சாய் S. S. பாலுராஜ் மற்றும் Sensi சோபான்ராஜ் கலக்கம் நன்றிகளை தெரிவித்துள்ளது.








