அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையில், மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசேட தேவையுடைய நபர்களுக்கு வீடமைப்பு உதவிகள் வழங்கப்பட்டன. ரூபா 700,000.00 பெறுமதியிலான புதிய வீடமைப்பு உதவி ஐந்து பயனாளிகளுக்கும், ரூபா 300,000.00 பெறுமதியிலான இருப்பிட வீட்டு திருத்த உதவி ஒருவருக்கும் வழங்கப்பட்டது.
இவர்களுக்கான முதற்கட்ட கொடுப்பனவுக் காசோலைகள் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகெளரி தினேஷ் அம்மணி மற்றும் உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினர்.
இந்த உதவித் திட்டம் சமூகத்தில் விசேட தேவையுடைய நபர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.












