Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாற்று திறனாளிகள் குறித்து சமூகமாக சிந்திக்க தவறிவிட்டோம்; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

மாற்று திறனாளிகள் குறித்து சமூகமாக சிந்திக்க தவறிவிட்டோம்; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

9 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

ஒரு காலத்தில் வடகிழக்கு மக்கள் ஒரு தேசமாக சிந்தித்து மாற்று திறனாளிகளை கையாண்ட சமூகம் இன்று மாவட்டம் கிராமம் என்று பிரிந்து நின்று தனி தனியாக செயல்படுவதால் மாற்று திறனாளிகள் குறித்து சிந்திக்க தவறிவிட்டோம் என சிரேஸ்ட ஊடகவியலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடி ஏர் முனை மாற்று திறனாளிகள் அமைப்பில் உள்ள குடும்பங்களில் ஏற்படும் மரண சடங்குகளை நடத்துவதற்கான உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

உலகில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது உலக சனத்தொகையில் கிட்டத்தட்ட 15 வீதம் பேர் மாற்று திறனாளிகளாக உள்ளனர். இலங்கையை பொறுத்தவரை சுமார் 17 இலட்சம் பேர் மாற்று திறனாளிகளாக இருப்பதாக கூறப்படுகிறது. அதில் 15 இலட்சம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் 2019 ம் ஆண்டு வரை சுமார் 7444 பேர் மாற்று திறனாளிகளாக இருப்பதாக கூறப்படுகிறது அது இன்று இன்னும் அதிகரித்திருக்கலாம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் மாற்று திறனாளிகளாக மாறியவர்கள் 4000 பேர் வரை உள்ளனர் . ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் ஏர் முனை மாற்று திறனாளிகள் அமைப்பில் பதிவு செய்யப்பட்டவர்கள் 853 பேர் உள்ளதோடு பதிவு செய்யப்படாத மாற்று திறனாளிகள் 138 பேர் உள்ளதாக தெரிவித்துள்ளனர் .

இன் நிலையில் யுத்தம் முடிவுக்கு வந்து பதினாறு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் மாற்று திறனாளிகளை கையாள்வதில் நாம் பின்தங்கிய நிலையிலேயே உள்ளோம்.

ஒரு காலத்தில் வடகிழக்கு மக்கள் ஒரு தேசமாக சிந்தித்து செயற்பட்டதால் மாற்று திறனாளிகளை அவர்களுக்கான கட்டமைப்புகளை உருவாக்கி கையாண்டதால் மாற்று திறனாளிகள் குறித்த பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிந்தது.

ஆனால் இன்று மாவட்டம் கிராமம் என்று பிரிந்து நின்று தனி தனியாக செயல்படுவதால் மாற்று திறனாளிகள் குறித்து சிந்திக்க தவறிவிட்டோம். இருந்தும் இங்கு ஒன்றிணைந்துள்ளவர்கள் எமது மாற்று திறனாளிகள் குறித்து சிந்தித்ததால் அவர்களுக்கான உதவிகளை செய்து வருகின்றனர் .

மிக முக்கியமாக ஏறாவூர் பற்று ஏர் முனை மாற்று திறனாளிகள் அமைப்பில் உள்ள குடும்பங்களில் ஏற்படும் மரண சடங்குகளை நடத்துவதற்கான உதவிகளை செய்வதற்கு ஒரு சங்கம் உருவாக்கப்பட்டு அதற்கான உதவிகளை பெற்று கொடுத்து வருகின்றோம் .

அந்த வகையில் ஏர் முனை மாற்று திறனாளிகள் அமைப்பினர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய பிரான்ஸ் நாட்டில் உள்ள துளிர் அமைப்பின் ஊடாக புலம்பெயர் உறவுகள் வழங்கிய நிதி உதவிகளை கொண்டு செங்கலடி சேவகம் தொண்டு நிறுவனத்தின் ஊடாக நான்கு இலட்சத்தி நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் பெறுமதியான கூடாரம் , கதிரைகள் , சமையல் பாத்திரங்களை பெற்றுக் கொடுத்துள்ளோம் . இதேபோல் இங்குள்ள பலரும் மாதாந்த உதவிகளை செய்து வருகின்றனர் . எனவே தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு உதவ வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது . ஒரு தேசமாக ஒன்றிணைந்து மாற்று திறனாளிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வாருங்கள் என கூறினார் .

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலஸ்தீன கைதிகள் விடுவிப்பு

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலஸ்தீன கைதிகள் விடுவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.