பாவனைக்கான நீர் இன்றி கஷ்டப்பட்ட மட்டக்களப்பு சித்தாண்டி உதயன்மூலை விவேகானந்தா வித்தியலாயத்திற்கு நீர் பம்பி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
சித்தாண்டி உதயன்மூலை விவேகானந்தா வித்தியாசத்தில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் பாவனைக்கான நீர் இன்றி கஷ்டப்பட்டு வந்த நிலையில் நீரை பெற்றுக் கொள்வதற்கான நீர் பம்பி ஒன்றை பெற்று தருமாறு பாடசாலை அதிபரினால் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த கோரிக்கையை சமூக சேவகரும் ஏறாவூர் பற்று வர்த்தக சங்க பொருளாளருமான மோகன்ராஜ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்து. மோகன்ராஜ் அவர்களினால் பாடசாலைக்கான நீர் பம்பி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
நேற்றைய தினம் (16) பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளரிடம் நீர் பம்பி கையளிக்கப்பட்டதோடு நீரை மாணவர்களின் பாவனைக்கு பெற்றுக் கொள்வதற்கான நீர்க் குழாய் பொறுத்தும் பணிகளை பாடசாலை அதிபர் உடனடியாக மேற்கொண்டிருந்தார்.










