Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எந்த நாட்டில் குற்றவாளிகள் பதுங்கினாலும் அவர்களை NPP கைது செய்யும்; கந்தசாமி பிரபு

எந்த நாட்டில் குற்றவாளிகள் பதுங்கினாலும் அவர்களை NPP கைது செய்யும்; கந்தசாமி பிரபு

8 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இந்த நாட்டை போதை நாடாக மாற்ற முயற்சித்து தோல்வி அடைந்த ஆட்சியாளர்கள் மற்றும் ஒரு திராணியற்ற முதுகெலும்பு இல்லாத எதிர்கட்சியாக இருந்து வரும் சஜித் பிரேமதாச தலைமையிலான கட்சி கடந்த காலத்தில் மத்திய வங்கி கொள்ளைகாரர் ஐக்கிய தேசிய கட்சியுடன் சேரமாட்டோம் என்றார்கள் இன்று வங்குரோத்து அரசியலுக்காக மீண்டும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டை அகல பாதாளத்திற்கு தள்ளுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என தேசிய மக்கள் சக்தி மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மட்டக்களப்பில் அவரது காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்பதை நீங்கள் அவதானிக்க முடியும். விசேடமாக இஷாரா செவ்வந்தி கைது செய்யப்படுவாரா? என பாராளுமன்றத்தில் கூட பேசப்பட்டது ஆனால் எந்த ஒரு நாட்டில் இருந்தாலும் அவர்களை கைது செய்து வரக்கூடிய அரசாங்கமாக இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த நாட்டிலே பழம் பெரும் அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஊடாக இந்த நாடும் மக்களும் எதிர் நோக்கியுள்ள பல பிரச்சனைகள் பல ஊழல் மோசடிகள் மத்திய வங்கி கொள்ளையர்களுடன் ஒன்று சேரமாட்டோம் என சஜித் பிரேமதாச அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த காலத்தில் ரணில் ராஜபக்ஷ என நாங்கள் குறிப்பிடும் போது ரணிலுடன் மகிந்தவுக்கு நேரடியாக உறவு இருந்ததன் காரணமாக பின் கதவால் இந்த நாட்டுக்குள்ளே உள்ள பாராளுமன்றத்துக்கு வந்தவர்தான் இந்த ரணில் விக்கிரமசிங்க இவர் ஜனாதிபதியாக வருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு மகிந்தவுடன் இணைந்து ஜனாதிபதி ஆகினார் இதற்கு சஜித் கட்சி அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்

அன்று ஒன்று சேரமாட்டோம் என்று கூறிய சஜித் அணியினர் இன்று அந்த நிலை மாறி அதே கட்சியுடன் இன்று ஒன்று இணைந்து தங்கள் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்

ஜக்கிய மக்கள் சக்தியில் இருந்த தலதாஅத்துக் கொரல இப்போது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டு இரு கட்சியையும் இணைத்துக் கொள்வதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்

இன்று எதிர்கட்சி ஒரு திராணியற்ற முதுகெலும்பு இல்லாத எதிர்கட்சியாக இருந்து கொண்டிருக்கின்றது; விசேடமாக ஐக்கிய தேசிய கட்சியுடன் மட்டுமல்ல நாமல் ராஜபக்ஷ, மஹிந்த அணியுடன் சேர்ந்துள்ளனர்.

கடந்த காலத்தில் ரணில் ராஜபக்ஷ என நாங்கள் குறிப்பிடும் போது ரணிலுடன் மகிந்தவுக்கு நேரடியாக உறவு இருந்ததன் காரணமாக பின் கதவால் இந்த நாட்டுக்குள்ளே உள்ள பாராளுமன்றத்துக்கு வந்தவர்தான் இந்த ரணில் விக்கிரமசிங்க; இவர் ஜனாதிபதியாக வருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு மகிந்தவுடன் இணைந்து ஜனாதிபதி ஆகினார்.

இப்போது இவர்கள் ரணிலுடன் ஒன்றிணைந்து இந்த நாட்டை ஆட்சி செய்யப் போவதாக ஈடுபட்டு வருகின்றனர் ஆகவே இவர்களுக்குள் எந்த கொள்கையும் இல்லாத இவர்கள் எப்படி இந்த நாட்டை வழிநடத்த போகின்றனர்? அன்று கொள்ளையர்கள் என்றனர் இப்போது ஒன்று சேர்ந்தால் நோக்கம் என்ன? இவர்கள் வங்குரோத்து அரசியலை மக்களுக்கு பேசிக் கொண்டிருக்கின்றனர் இந்த திராணியற்றவர்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் வங்குரோத்து நாடாக மாற்றி மீண்டும் பாதாளத்துக்கு தள்ளுவதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர் என்பதை மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஐ.எம்.எப் ஆன சர்வதேச நாணய நிதியம் நாடு சரியான முறையில் முன்னெடுத்து வருவதாக வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு பன்மடங்காக அதிகரித்து கொண்டிருக்கின்றது எனவே இந்த நாட்டையும் மக்களையும் வளமான நாடாக மாற்றுவோம் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கனடா வேலைவாய்ப்புக்காக எத்தியோப்பியா ஊடாக பயணித்த இலங்கையர்கள் மீட்பு
செய்திகள்

கனடா வேலைவாய்ப்புக்காக எத்தியோப்பியா ஊடாக பயணித்த இலங்கையர்கள் மீட்பு

June 9, 2026
நேர்முகத் தேர்வில் முன்னுரிமை கோரி யாழ் சுகாதார தொண்டர்களின் போராட்டம் தீவிரம்!
செய்திகள்

நேர்முகத் தேர்வில் முன்னுரிமை கோரி யாழ் சுகாதார தொண்டர்களின் போராட்டம் தீவிரம்!

June 9, 2026
நானுஓயாவில் மணல் ஏற்றிச் சென்ற லொறி மண் மேட்டில் மோதி விபத்து!
செய்திகள்

நானுஓயாவில் மணல் ஏற்றிச் சென்ற லொறி மண் மேட்டில் மோதி விபத்து!

June 9, 2026
தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!
செய்திகள்

தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!

June 9, 2026
காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

June 9, 2026
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

June 9, 2026
Next Post
கடுமையான மின்னல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடுமையான மின்னல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.