Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஷாரா செவ்வந்தி கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

இஷாரா செவ்வந்தி கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக விசாரணைக்காக இஷாரா செவ்வந்தி அளுத்கம, தொடந்துவ மற்றும் மித்தெனிய உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அத்துடன், அவர் நேற்று (19) கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கெஹெல்பத்தற பத்மே’யின் ஆலோசனைக்கு அமைய, இஷாராவின் தோற்றத்தை ஒத்த யுவதி ஒருவரைத் தேடும் பணியின்போது, ‘ஜஃப்னா சுரேஷ்’ என்பவரை ‘தக்ஷி’ என்ற யுவதி சந்தித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ‘தக்ஷிக்கு சிங்கள மொழி தெரியாத நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுரேஷ் அவரை நேபாளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதன்படி, ‘தக்ஷி’ எதுவுமே அறியாமல் நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என காவல்துறை தெரிவித்தனர்.

முன்னதாக, இஷாரா செவ்வந்தி வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில், மத்துகம வெலிபென்ன பகுதியில் அவருக்கு தங்குமிடம் வழங்கிய காவல்துறை கொன்ஸ்டபிள் மற்றும் அவரது மனைவியின் தாயார் உட்பட நான்கு சந்தேக நபர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

கொன்ஸ்டபிளின் மனைவியின் தாயார் நேற்று சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

பின்னர் அவர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதவான் கே.கே. நாணயக்கார உத்தரவிட்டார்.

இதேவேளை, நேபாளத்திலிருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு பேலியகொட குற்றத் தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தினேஷ் குமார எனப்படும் கம்பஹா பபாவிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதன்படி, கட்டான, மஹாபாகே பகுதியில் உள்ள கெரவலப்பிட்டி அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகிலுள்ள 18ஆவது மைல் கல் பகுதியில் மறைத்து வகைப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்பட்டும் சுமார் 50 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த தோட்டாக்கள் கெஹல்பத்தர பத்மேவினால் வழங்கப்பட்டதாகவும் அவருக்குத் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
Next Post
சொத்து விசாரணைகளுக்காக இன்று திறக்கப்படுகிறது புதிய விசாரணைப் பிரிவு

சொத்து விசாரணைகளுக்காக இன்று திறக்கப்படுகிறது புதிய விசாரணைப் பிரிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு