Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஹல கோட்டே அருகே ரயில் தடம்புரண்டதால் மலையக ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு

இஹல கோட்டே அருகே ரயில் தடம்புரண்டதால் மலையக ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு

10 months ago
in செய்திகள்

இஹல கோட்டே ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (19) தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி தடம்புரண்ட ரயிலை மீள் தடமேற்றும் பணிகள் மேலும் தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

இதனால் இன்று காலை 07 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ரயில் மீள் தடமேற்றும் நடவடிக்கையில் மேலும் தாமதம் ஏற்படக்கூடும் என்பதால், மேலும் இரண்டு ரயில் சேவைகளை இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, மதியம் 12.40 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயாவுக்குச் செல்லும் ரயிலையும், பிற்பகல் 03.00 மணிக்கு கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்குச் செல்லும் கடுகதி ரயிலையும் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று மதியம் ரயில் மார்க்கத்திற்கு அருகில் ஒரு சிறிய மண்சரிவு ஏற்பட்ட நிலையில், ரயில் தடம் புரண்டது.

பின்னர் ஏற்பட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மலையகத்துக்கான ரயில் சேவைகளை மட்டுப்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
செய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு

August 1, 2026
“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு
செய்திகள்

“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு

August 1, 2026
கொழும்பு கடற்பரப்பில் 17 கொள்கலன்கள் கடலில் விழுந்தன; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு கடற்பரப்பில் 17 கொள்கலன்கள் கடலில் விழுந்தன; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

August 1, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்!

August 1, 2026
ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு
செய்திகள்

ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

August 1, 2026
இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது
செய்திகள்

இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது

August 1, 2026
Next Post
இன்றிரவு நிகழும் “ஓரியோனிட்ஸ்” விண்கல் மழை; அதிகாலை 3 முதல் 5 மணி வரை காணலாம்

இன்றிரவு நிகழும் “ஓரியோனிட்ஸ்” விண்கல் மழை; அதிகாலை 3 முதல் 5 மணி வரை காணலாம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு