புதிய இணைப்பு
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’ என்ற லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார்.
அவர் இன்று (22) காலை பிரதேச சபையில் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள், இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், படுகாயமடைந்த அவரை பிரதேச சபை அதிகாரிகள் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.
துப்பாக்கிதாரிகள், பிரதேச சபை தலைவரிடம் கடிதம் ஒன்றில் கையொப்பம் பெறுவது போன்று பிரவேசித்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
முதல் இணைப்பு
வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு
வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அவர் பிரதேச சபையின் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் இதற்கு முன் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தாரக நாணயக்காரவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








