Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“மண்முனைப்பற்றில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டும் ஏன் வழக்கு?”; ஹிஸ்புல்லா கேள்வி

“மண்முனைப்பற்றில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டும் ஏன் வழக்கு?”; ஹிஸ்புல்லா கேள்வி

9 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அரச காணிகளில் வசித்துவரும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டும் வழக்குத் தொடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற் கொள்ளப்படும் என காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) அன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்களுக்கான வினா நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பியான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஹிஸ்புல்லாஹ் எம்.பி. தனது கேள்வியில், மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அரச காணிகளில் 30 சதவீத முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்குப் பல ஆண்டுகளாகக் காணி உறுதி அல்லது காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமல் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், அங்கு அரச காணிகளில் வசிக்கின்றவர்களை வெளியேற்ற வேண்டும் எனத் தெரிவித்து, அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக மாத்திரம் வழக்குத் தொடுக்கப்பட்டு வருகின்றது.எனவே முஸ்லிம்களுக்கு எதிராக மாத்திரம் ஏன் இவ்வாறு செயற்படுகின்றனர் எனத் தேடிப்பார்க்கக் காணி அமைச்சினால் விசேட விசாரணைக் குழுவொன்றை நியமிக்க முடியுமா? என கேட்டார்.

இதற்கு பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண பதிலளிக்கையில், மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அரச காணிகளில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்படுகின்றதா என்பது தொடர்பில் காணி ஆணையாளர் நாயகம் ஊடாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம்.

அத்துடன், மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் காணியற்ற மக்கள் தங்களுக்குக் காணியொன்றைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தவர்களில் தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட சிலருக்குக் காணி வழங்கியுள்ளோம். என்றாலும் அம்மக்களுக்கு அளிப்பு உறுதி அல்லது காணி அனுமதிப்பத்திரம் வழங்கவில்லை.

காணி கோரி அரசாங்கத்திடம் விண்ணப்பித்தவர்களில் சிலர் காணி கச்சேரிக்கு வருகை தராமை, 8பேர்ச்சுக்கு குறைந்த காணி விண்ணப்பதாரிகள் நிராகரிக்கப்பட்டமை, காணி முரண்பாடு இருக்கும் அரச காணிகளில், அந்த முரண்பாடுகள் தீர்க்கப்படாததால், காணி உறுதி வழங்க முடியாமல் போனமையே காணி உறுதி அல்லது காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமைக்குக் காரணம் என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்
செய்திகள்

பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்

July 25, 2026
700 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு கடத்தல்: ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ நிறுவனத்துக்கும் CID விசாரணை வளையம்
செய்திகள்

700 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு கடத்தல்: ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ நிறுவனத்துக்கும் CID விசாரணை வளையம்

July 25, 2026
கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!
செய்திகள்

கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!

July 25, 2026
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்

July 25, 2026
மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு
செய்திகள்

மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு

July 25, 2026
மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

July 25, 2026
Next Post
இலங்கையில் முதல் முறையாக காது கேளாதோருக்கான “என்டொஸ்கொபி யுஸ்ட்ச்ஷியன் டியுப் சத்திரசிகிச்சை” வெற்றிகரமாக நிறைவேற்றம்

இலங்கையில் முதல் முறையாக காது கேளாதோருக்கான “என்டொஸ்கொபி யுஸ்ட்ச்ஷியன் டியுப் சத்திரசிகிச்சை” வெற்றிகரமாக நிறைவேற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு