Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீதி விபத்துகளை ஏற்படுத்தும் செங்கலடி சந்தை வீதிக்கு மாற்று திட்டம்?; வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!

வீதி விபத்துகளை ஏற்படுத்தும் செங்கலடி சந்தை வீதிக்கு மாற்று திட்டம்?; வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

அடிக்கடி வீதி விபத்துக்களை ஏற்படுத்தும் செங்கலடி பொதுச்சந்தைக்கு முன்பாக உள்ள வீதிச் சமிக்ஞை விளக்கு பகுதிக்கு மாற்றிடாக தபால் கந்தோர் வீதியை பயன்படுத்துவதற்கான வீதிகளை புனரமைத்து தருமாறு ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் ஏறாவூர் பற்று தவிசாளர் ஊடாக வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மேற்படி கடிதத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாவது,

வீதி விபத்துகளை தடுக்கும் வகையில் செங்கலடி தபால் கந்தோர் வீதி ஊடான சந்தை வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.

செங்கலடி சந்தைக்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள வீதி சமிக்ஞை விளக்குகள் காரணமாக தொடர்சியாக வாகன விபத்துக்கள் ஏற்படுவதோடு, பிரதான வீதியின் ஊடாக, சந்தை வீதியால் பயணிக்கும் கனரக வாகனங்களினால் வாகன நெரிசல்கள் ஏற்படுகிறது.

இவ் வீதியால் அதிகளவான வாகனங்கள் பயணிப்பதனால் விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அத்தோடு வாகனங்கள் வீதி சமிக்ஞைகளை மீறி செயற்பட நிர்ப்பந்திக்கப்படுவதால் வீதி விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது.

எனவே மேற்படி விடயங்களை கருத்தில் கொண்டு செங்கலடி சந்தைக்கான வாகன போக்குவரத்து பாதையாக செங்கலடி தபால் கந்தோர் வீதி ஊடான பாதையை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், தபால் கந்தோர் வீதி ஊடாக செல்லும் முருகன் கோயில் சந்தை வீதிகளை ,வீதி அபிவிருத்தி திணைக்களம்(RDD) ஊடாக கனரக வாகனங்கள் செல்லக் கூடிய வகையில் உடனடியாக அபிவிருத்தி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன். எனவும் இதன் ஊடாக செங்கலடி பிரதான வீதி ஊடாக சந்தைக்கு செல்லும் வாகனங்கள் தடுக்கப்படுவதோடு பிரதான வீதிச் சமிக்ஞை பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலையும், விபத்துக்களையும் குறைக்க முடியும். என தெரிவித்துள்ளார்.

அந்தஅடிப்படையில் புனரமைக்கப்பட வேண்டிய வீதிகளாக, தபால் கந்தோர் வீதி – 300M ,முருகன் கோயில் சந்தை வீதி – 350M ,செங்கலடி பிரதான வீதி ஊடாக பயணிக்கும் சந்தை வீதி – 200M ஆகிய வீதிகள் புனரமைப்பு செய்யப்பட்டு செங்கலடி சந்தைக்கான போக்குவரத்து பாதை மாற்றப்பட்டால் மாத்திரமே செங்கலடி பிடித்தமான வீதியில் அமைந்துள்ள வீதிச் சமிக்ஞை விளக்கு பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. பிரபு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன்,
வைத்தியர் இ. சிறிநாத், ஞா.சிறிநேசன் ஆகியோருக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
2026 கல்வியாண்டிற்கான மாணவர்களுக்கு பாதணி வவுச்சர்களை வழங்குவதற்கு தீர்மானம்

2026 கல்வியாண்டிற்கான மாணவர்களுக்கு பாதணி வவுச்சர்களை வழங்குவதற்கு தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு