மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி வாகநேரியில் இன்று (23) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 08 பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
கல்முனையில் இருந்து வந்த வேன் ஒன்றும் வெலிக்கந்த பகுதியில் இருந்து வந்த டிப்பர் ராக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கல்முனைக்கு சென்று தமது இருப்பிடமான சேனப்புர எனும் இடத்திற்கு வீடு திரும்பி கொண்டு இருந்த வேளை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
காயம் அடைந்தவர்கள் வாழச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை போலிஸார் மேலதிக விசாரணைகளை கொண்டு வருகின்றனர்.













