Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்

யாழ் பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்

9 months ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றக்கோரி பருதித்துறை வர்த்தக சமூகம் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (24) காலை முன்னெடுத்தனர்.

பருத்தித்துறை நவீன சந்தையிலிருந்து பருத்தித்துறை நகரசபை வரை சென்று அங்கு தவிசாளர் மற்றும் செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

பருத்தித்துறை நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் சில மணிநேரம் மூடப்பட்டே குறித்த பேரணி இடம்பெற்றது.

நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்த மரக்கறிச் சந்தையை, மீன் சந்தை வீதியில் புதிதாக கட்டடம் ஒன்றை நிர்மாணித்து அங்கு வியாபாரிகளை பருத்தித்துறை நகரசபை செயலாளர் தலைமையில் மாற்றம் செய்து வைக்கப்பட்டது.

ஆனாலும் புதிய சந்தைக் கட்டடம் போதிய இடவசதிகளோ அல்லது போக்குவரத்து வசதிகள் குறைந்தவையாகவும், மழை நேரங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதாகவும், நகரில் இருந்து மரக்கறிச் சந்தை தூரம் என்பதால் பொதுமக்கள் சந்தையை நாடுவது குறைவாகவுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

இந்நிலையில் சுமார் 200 வரையானோர் கலந்துகொண்ட குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் புதிய இடத்திற்கு மாற்றப்பட்ட மரக்கறி சந்தையை மீண்டும், நவீன சந்தை தொகுதிக்கு மாற்றித்தருமாறு கோசமெழுப்பினர்.

இதேவேளை குறித்த சந்தையை பழைய இடத்திற்கு மாற்றித்தருமாறு மகஜரை வழங்குவதற்கு செயலாளரையும், தவிசாளரையும் நகரசபைக்கு வெளியே வருமாறு வர்த்தகர்களால் கோரப்பட்ட நிலையில் சுமார் நாற்பது நிமிடம் வரை செயலாளர் வெளியேவந்து மகஜரை தவிசாளருடன் இணைந்து பெற்றுக்கொள்ள மறுத்திருந்தார்.

வர்த்தகர்கள் விடாப்பிடியாக செயலாளர் வெளியே வரவில்லை எனில் தாம் நகரசபை வாயிலை விட்டு எழுந்திருக்கமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க நகர சபை செயலாளர் வெளியே வந்து மகஜரை தவிசாளருடன் இணைந்து பெற்றுக்கொள்ள வருமாறு கோரிய நிலையில் இணங்கிய செயலாளர் தவிசாளருடன் இணைந்து மகஜரை பெற்றுக்கொண்டார்.

மகஜரை பெற்றுக்கொண்ட பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வர்த்தகர்களின் கோரிக்கையை மதித்து தாம் விரைவில் சந்தையை பழைய இடத்திற்கு மாற்றுவதற்குரிய ஆய்வுக்குழு அறிக்கை கிதைக்கப்பெற்றதும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்த நிலையில் போராட்டம் நிறைவுபெற்றது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு
செய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

July 31, 2026
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்; பாலங்கள், வீதிகள், யானை வேலிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கவனம்!
செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்; பாலங்கள், வீதிகள், யானை வேலிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கவனம்!

July 31, 2026
இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்
செய்திகள்

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்

July 31, 2026
ஜனாதிபதி குறித்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு; பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

ஜனாதிபதி குறித்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு; பொலிஸ் அதிகாரி கைது

July 31, 2026
கண்டியில் நிர்மாணப் பணியின்போது மண்மேடு சரிவு; 3 பிள்ளைகளின் தந்தை கவலைக்கிடம்!
செய்திகள்

கண்டியில் நிர்மாணப் பணியின்போது மண்மேடு சரிவு; 3 பிள்ளைகளின் தந்தை கவலைக்கிடம்!

July 31, 2026
தெஹிவளை கொள்ளை வழக்கு; இரு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை!
செய்திகள்

தெஹிவளை கொள்ளை வழக்கு; இரு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

July 31, 2026
Next Post
பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு