Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அவுஸ்திரேலியாவில் இலட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் வீதிகளை ஆக்கிரமித்ததால் போக்குவரத்து தடை

அவுஸ்திரேலியாவில் இலட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் வீதிகளை ஆக்கிரமித்ததால் போக்குவரத்து தடை

10 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தேசியப் பூங்காவில் (Christmas Island National Park) வசிக்கும் இலட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் (Red Crabs), தங்களின் வருடாந்திர இனப்பெருக்கப் பயணத்தின் காரணமாகச் வீதிகளை ஆக்கிரமித்துள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இது ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடக்கும் ஒரு வினோதமான இயற்கை நிகழ்வாகும்.

இந்தச் சிவப்பு நண்டுகள் கிறிஸ்மஸ் தீவின் காட்டுப் பகுதிகளில் சிறிய குழிகளை அமைத்து வாழ்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், இனப்பெருக்கப் பருவம் வரும்போது, இலட்சக்கணக்கான ஆண் மற்றும் பெண் நண்டுகள் காட்டில் இருந்து வெளியேறி, கடற்கரையை நோக்கிப் படையெடுக்கின்றன.

கடற்கரையில் ஆண் நண்டுகள் குழிகளை அமைக்க, பெண் நண்டுகள் அவற்றில் முட்டைகளை இட்டு சுமார் இரண்டு வாரங்கள் அடைகாக்கின்றன.நவம்பர் மாதத்தின் மத்தியில், முட்டைகளில் இருந்து வெளிவரும் குட்டி நண்டுகள் கடலுக்குள் செல்கின்றன. இவை கடல் அலைகளில் சுமார் ஒரு மாத காலம் தாக்குப்பிடித்த பிறகு, இளம் நண்டுகளாக மீண்டும் கிறிஸ்மஸ் தீவிற்குத் திரும்புகின்றன.

தற்போது இனப்பெருக்கப் பயணத்தை மேற்கொண்டுள்ள நண்டுகள், தீவின் வீதிகளை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளதால், அந்த வழிகளில் மனிதப் போக்குவரத்து முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கிறிஸ்மஸ் தீவு தேசியப் பூங்காவின் பணிப்பாளர் அலெக்ஸா கூறுகையில்,

“ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் நண்டுகளின் இந்த அற்புதமான பயணத்திற்காகத் தங்களால் முடிந்த அளவு வீதிகளில் போக்குவரத்தைத் தவிர்த்துக் கொள்கின்றனர். இது ஒரு அருமையான அனுபவம். சிவப்பு நண்டுகள் ஒருபோதும் எங்களுக்குத் தொந்தரவாக இருந்ததில்லை.” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பயணத்தின்போது நண்டுகள் பாதுகாப்பாகச் செல்வதற்காகத் தீவின் அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்கின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
Next Post
உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு