அநுராதபுரத்தில் கஸ்ஸப்ப தேரர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கஸ்ஸப்ப தேரருக்கு ஆதரவாகச் செயற்படும் சிலர், குறித்த போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த ராஜாங்கனை தேரர் உள்ளிட்ட குழுவினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ளதுடன், அங்கு தொடர்ந்தும் அமைதியின்மை நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.














